ராஜஸ்தான் மாநிலத்தில நடைபெறும் தேசிய ஊடக மாநாட்டில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது :
ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபுவில். பிரம்மா குமாரிகள் ஏற்பாடு செய்த தேசிய ஊடக மாநாட்டில் 2024 கலந்துகொண்டேன்.
ஒரு நிலையான மற்றும் அதிகாரம் பெற்ற சமூகத்தை உருவாக்குவதில் ஊடகங்களின் பங்கு பற்றிய அர்த்தமுள்ள விவாதம் நடைபெற்றது. இது டிஜிட்டல் யுகத்தில் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஊக்கமளிக்கும் தளம் என அவர் கூறியுள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய எல்.முருகன், இன்றைய டிஜிட்டல் யுகத்தில், போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்துகின்றன, அவை நம்பகமான ஆதாரங்களின் மீதான நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் விரைவாகப் பரவி மக்களைப் பிளவுபடுத்தி பீதியை உருவாக்குவதாகவும் அமைச்சர் எல்.முருகன் கூறினார்.