விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கெங்காபுரம் கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். மேலும், இது தொடர்பாக மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், வட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட மோகன் ராஜ், தனது நிலத்தை 23 பேர் அபகரிக்க முயல்வதாக கூறி தற்கொலை கடிதம் எழுதி வைத்து, தனது உடலில் தீ வைத்துக் கொண்டார்.
இதையடுத்து தீக்காயங்களுடன் மோகன் ராஜை மீட்ட போலீசார், அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.