கூகுள் மேப் உதவியுடன் வடமாநில கொள்ளையர்கள் ஏடிஎம்களை கண்டறிந்து கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்ததாக சேலம் சரக டிஐஜி உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ராஜஸ்தான், ஹரியானா கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக சேலம் சரக டிஐஜி உமா விளக்கம் அளித்துள்ளார்.
அதில், குமாரபாளையத்தில் பிடிபட்டது ஏடிஎம்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பல் என்பது தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
மேலும், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொள்ளையன் ஒருவர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த அஸ்ரலி என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். திட்டமிட்டு என்கவுன்ட்டர் செய்யப்படவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.