சர்வதேச சுற்றுலா மையமாக இந்தியா விளங்குவதாக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சுற்றுலா தினத்தையொட்டி டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், லட்சத்தீவில் பிரதமர் மோடி குறுகிய நேரமே செலவிட்ட போதிலும், அந்தத் தீவைக் குறித்து உலகமே ஆர்வமுடன் அறிந்து கொண்டதாக கூறினார்.
இதன்மூலம் இந்திய சுற்றுலாவின் தூதராக பிரதமர் மோடி திகழ்வதாக ஜெகதீப் தன்கர் புகழாரம் சூட்டினார். அமைதி மற்றும் செழிப்பின் அடையாளமாக சுற்றுலா விளங்குவதாகவும், நாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள் வெளிநாட்டினரை ஈர்ப்பதாகவும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பெருமிதம் தெரிவித்தார்.