அப்துல் கலாமை பின்லேடனுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் பிரிவு பெண் நிர்வாகிக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் மும்ப்ராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத் பவார் பிரிவு பெண் நிர்வாகி ருதா அவாட், அப்துல் கலாம் எவ்வாறு குடியரசுத் தலைவரானாரோ அதே வழியில்தான் ஒசாமா பின்லேடன் பயங்கரவாதி ஆனதாக தெரிவித்தார்.
மேலும் ஒசாமா பின்லேடன் பிறக்கும்போதே பயங்கரவாதியாக பிறக்கவில்லை என்றும், சமூகம்தான் அவரை பயங்கரவாதியாக மாற்றியதாகவும் ருதா அவாட் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசினார்.
அத்துடன் அனைவரது வாழ்க்கை வரலாற்றையும் படித்து அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார். அப்துல் கலாமை பின்லேடனுடன் ஒப்பிட்டு ருதா அவாட் கருத்து தெரிவித்ததற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டுமென பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.