பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பாம்மாள் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இயற்கை விவசாயியும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பாப்பம்மாள் இயற்கை எய்திய செய்தி வருத்தமளிக்கிறது எனவும், அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திப்பதாகவும் தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பாப்பாம்மாளின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை, இயற்கை விவசாயத்திற்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்த பாப்பம்மாளின் பங்களிப்பை மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி பாராட்டியதாக தெரிவித்துள்ளார்.
பாப்பம்மாளின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, 110 வயதான பாப்பம்மாள் கடைசி வரை இயற்கை விவசாயத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார் என புகழாரம் சூட்டியுள்ளார்.