அக்னிபாத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் நான்கரை ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெறும் வீரர்களுக்கு தங்களது நிறுவனத்தில் பணியில் இடஒதுக்கீடு அளிப்பதாக பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் தொழில்நுட்ப மற்றும் பொது நிர்வாகப் பிரிவில் 15 சதவீதமும், பாதுகாப்பு பணியில் 50 சதவீதமும் அக்னிவீரர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என பிரமோஸ் ஏரோஸ்பேஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தியா, ரஷ்யாவின் கூட்டு முயற்சியில் இந்த நிறுவனம் உருவானது குறிப்பிடத்தக்கது.