திருச்சியில் 3-ஆவது ஆண்டு புத்தகத் திருவிழா வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் தொடங்கியது.
அக்டோபர் 6ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
இந்தக் கண்காட்சியில் 160 அரங்குகளில் 150-க்கும் மேற்பட்ட பதிப்பாளா்கள், லட்சக்கணக்கான புத்தகங்களை காட்சிப்படுத்தியுள்ளனா்.தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சியை காண அனுமதி இலவசம் என்றும், நாள்தோறும் மாலை நேரத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.