ஈரான், ஈராக், சிரியா, ஏமன் ஆகியவை சபிக்கப்பட்ட தேசங்கள் என ஐ.நா.வில் வரைபடத்துடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. வருடாந்திர மாநாடு நடைபெறுகிறது. இதில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆசிர்வதிக்கப்பட்ட தேசங்கள், சபிக்கப்பட்ட தேசங்கள் என இரண்டு வரைபடங்களைக் கையில் ஏந்தினார்.
ஆசிர்வதிக்கப்பட்ட தேசங்களின் பட்டியலில் இந்தியா, எகிப்து, சூடான், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இடம்பெற்றிருப்பதாகவும், இந்திய பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல் வழியாக ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே அந்த நாடுகள் பாலமாக செயல்படுவதாகவும் இஸ்ரேல் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அதேசமயம், சபிக்கப்பட்ட தேசங்களின் பட்டியலில் இடம்பெற்ற ஈரானின் அத்துமீறலை ஒடுக்கவில்லை என்றால், மத்திய தரைக்கடலில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் பாதிப்பு ஏற்படும் என பெஞ்சமின் நெதன்யாகு பேசினார்.