வேடசந்தூரில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் தப்ப முயன்றபோது எலும்பு முறிவு ஏற்பட்டதால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் மாசிபெரியண்ணா என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மதுமோகன் மற்றும் சரவணன் ஆகிய இருவரையும் போலிசார் விசாரணைக்காக வேடசந்தூருக்கு அழைத்து சென்றனர்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்ய பெரியகுளம் பகுதிக்கு அழைத்துச் சென்றபோது இருவரும் தப்பியோட முயன்றனர். இதில் இருவருக்கும் கை, கால் முறிவு ஏற்பட்ட நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.