இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் திரைப்பட பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரை அவரது பிறந்த நாளில் பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் தமது எக்ஸ் தளத்தில், லதா மங்கேஷ்கரின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்வதாகவும், அவர் மறைந்தாலும் தமது பாடல்கள் மூலம் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பதாக புகழாரம் சூட்டியுள்ளார்.
லதா திதிக்கும் ஒரு தனி பந்தம் இருந்தது. அவரின் பாசத்தையும் ஆசீர்வாதத்தையும் பெறும் பாக்கியம் தமக்கு கிடைத்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
லதா மங்கேஷ்கர் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். மேலும், பாரத ரத்னா உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.