அமைச்சராக பதவி ஏற்றுள்ள செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்சாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
அமைச்சர்கள் இலாகாக்கள் விவரம் ;
வி. செந்தில்பாலாஜி -மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை .
கோவி செழியன் – தொழில்நுட்பக் கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட உயர்கல்வித்துறை
ஆர்.ராஜேந்திரன் – சுற்றுலா மற்றும் சர்க்கரை, கரும்பு கலால் மற்றும் கரும்பு வளர்ச்சித் துறை
எஸ்.எம். நாசர் – சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன், அகதிகள் மற்றும் வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வக்ஃப் வாரியம் ஒதுக்கப்பட்டுள்ளது.