10 ஆயிரத்து 197 ட்ரோன்களை ஒரே நேரத்தில் விண்ணில் பறக்கவிட்டு சீனா கின்னஸ் சாதனை படைத்தது.
சீனாவின் ஷென்சென் பே பார்க் பகுதியில் ட்ரோன்களின் அணிவகுப்புடன் சீன பெருஞ்சுவர், பல்வேறு விலங்குகளின் உருவங்களை உருவகப்படுத்தி, எழில்மிகு காட்சி அரங்கேறியது.
ஒரே நேரத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ட்ரோன்களை இயக்கியது மற்றும் அனைத்து ட்ரோன்களையும் ஒரே கணினி கட்டுப்படுத்தியதற்காக சீனா இரண்டு கின்னஸ் சாதனை படைத்தது.