குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி ராகுல்காந்திக்கு எதுவுமே தெரியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் குஞ்ச்புராவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், ராகுல் காந்தி எப்போதும் குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றியே பேசி வருவதாகவும், ஆனால் அவருக்கு அதுப்பற்றி என்ன என்று கூட தெரியாது எனக் கூறியுள்ளார்.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
















