சிறப்புரிமை பெற்ற சிலருக்கு மட்டும் சூரியன் பிரகாசிப்பதாக உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைமுகமாக சாடியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், உதயசூரியன் என்பது தவறு, வாரிசு அரசியல் உதயம் என்பதே சரி என பொருள்படும்படியான கேலிச் சித்திரம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், சிறப்புரிமை பெற்ற சிலருக்கு மட்டும் சூரியன் பிரகாசிப்பதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 40 மாதங்களாக மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு கிரகணம் பிடித்துள்ளது எனவும் பதிவிட்டுள்ளார்.
திமுகவினருக்கும், அவர்களது குடும்பத்துக்கும் மட்டுமே, விடியல் என்ற வார்த்தையின் அர்த்தம் பொருந்தும் என்பதையும் மக்கள் தற்போது புரிந்து கொண்டதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.