தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் என்பதை தவிர வேறு எந்தத் தகுதியும் அவருக்கு இல்லை என மத்திய அமைச்சர் எல். முருகன் விமர்சித்தார்.
இதுதொடர்பாக டெல்லியில் அவர் அளித்த பேட்டியில், திமுகவின் வாரிசு அரசியலுக்கு உதயநிதி ஸ்டாலின் நியமனம் மற்றொரு உதாரணம் என குறிப்பிட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினரை மட்டுமே சிந்திப்பதாக கூறிய மத்திய அமைச்சர் எல். முருகன், வரும் தேர்தல்களில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்.