எளிமை - நேர்மை - தூய்மை, பெருந்தலைவர் காமராஜர் - சிறப்பு கட்டுரை!
Oct 24, 2025, 08:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எளிமை – நேர்மை – தூய்மை, பெருந்தலைவர் காமராஜர் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 2, 2024, 11:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெருந்தலைவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கல்விக் கண் திறந்தவர், கர்மவீரர் என்றெல்லாம் புகழப் படும் காமராஜரின் நினைவு தினம் இன்று. எளிமைக்கும் மக்கள் நலப் பணிகளுக்கும் பெயர் பெற்ற பெருந்தலைவர்… காலமெல்லாம் தன்னலம் கருதாது மக்கள் நலன் சார்ந்தே செயல்பட்ட பெருந்தலைவர் காமராஜரின் நினைவைப் போற்றும் விதமாக ஒரு செய்தி தொகுப்பு.

தன்னிகரில்லா தலைவனாக இன்றளவும் போற்றப்படுகின்ற கர்ம வீரர் காமராஜர்,1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி, விருதுநகரில், குமாரசுவாமி-சிவகாமியம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். சிறு வயதிலே தந்தை இறந்த காரணத்தால், ஆறாம் வகுப்போடு காமராஜரின் படிப்பு நின்று போனது.

சுதந்திரப் போராட்டம் நாடெங்கும் பரவியிருந்த நேரமது. 1919ஆம் ஆண்டு தனது 16 வது வயதில் காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். தனது 18 வது வயதில், காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் காமராஜர் பங்கெடுத்தார்.

1930ஆம் ஆண்டில், வேதாரண்ய உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துக்கொண்டதற்காக, காமராஜர் முதன் முதலில் சிறைச்சாலை சென்றார். அடுத்தடுத்து,சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு, 6 முறை சிறை சென்று, 9 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.

1940 ஆம் ஆண்டு தொடங்கி 14ஆண்டுகள், தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவராக பதவி வகித்த காமராஜர், 1954ல் தமிழ்நாட்டின் முதல்வரானார். 1963ஆம் ஆண்டுவரை 9 ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதல்வராக பதவி வகித்தார். எட்டு பேரைக் கொண்ட சின்னஞ்சிறிய அமைச்சரவையுடன் நாட்டு மக்களுக்குப் பெருந்தலைவர் காமராஜர் ஆற்றிய பணிகள் இன்றும் மக்களுக்கு நன்மையளித்துக் கொண்டிருக்கின்றன.

தனது ஆட்சி காலத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான பள்ளிகளைத் திறந்ததால்,கல்விக் கண் திறந்த காமராஜர் என்று போற்றப்படுகிறார். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு‌ தொடக்கப்பள்ளி, ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் ஒரு உயர்நிலைப் பள்ளி என்பது காமராஜரின் முக்கியக் கொள்கையாக இருந்தது.

பதினோராம் வகுப்பு வரை இலவசக் கட்டாயக் கல்வி என்பதையும் காமராஜர் உறுதி செய்தார். பொருளாதார ஏற்றத்தாழ்வு உடைகளில் தெரியக்கூடாது என்பதற்காக பள்ளி சீருடைத் திட்டத்தை அறிமுகப் படுத்தியதோடு, மகத்தான மதிய உணவுத்திட்டத்தின் மூலம்,பள்ளி மாணவர்களின் வயிறு நிறைய வைத்தார்.

ஆழியாறு-பரம்பிக்குளம், மணிமுத்தாறு, வைகை என அணைக்கட்டுகள் பல கட்டி, பாசன வசதியால் விவசாயம் செழிக்க வழிவகை செய்தார். என்எல்சி, ஐசிஎஃப் போன்றவற்றை உருவாக்கி, தமிழகத் , தொழில்துறை வளர்ச்சிக்கும் வித்திட்டார். அதனாலேயே, காமராஜர் ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்று போற்றப்படுகிறது.

இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித நேருவின் அழைப்பை ஏற்று தேசிய அரசியலில் நுழைந்த பெருந்தலைவர் காமராஜர்,1964 ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற்றுக் கொண்டார். 1967 ஆம் ஆண்டு வரை, அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பதவி வகித்த,பெருந்தலைவர் காமராஜர், மூன்று முறை பிரதமர்களைத் தேர்வுசெய்த கிங் மேக்கராக திகழ்ந்தார்.

நாட்டின் சோதனையான காலக் கட்டத்தில், நேருவின் மறைவுக்குப் பிறகு, லால்பகதூர் சாஸ்திரியையும், அவரது மறைவுக்குப் பிறகு இந்திரா காந்தியை இருமுறையும் பிரதமராகத் தேர்வுசெய்து, தேசிய அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவராக பெருந்தலைவர் காமராஜர் விளங்கினார்.

1971ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில் நாகர்கோவிலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காமராஜர், கடைசி வரை நாடாளுமன்ற உறுப்பினராக பதவியில் இருந்தார். 1976ம் ஆண்டு, இந்திய அரசு, பெருந்தலைவர் காமராஜருக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பித்தது.

தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கிய கர்ம வீரர் காமராஜர், நேர்மை, எளிமை, தூய்மை இவற்றின் அடையாளமாக வாழ்ந்து வந்தார். சத்தியத்தை வலியுறுத்திய மகாத்மா காந்தியின் கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்து வந்த கர்ம வீரர் காமராஜர், காந்தியடிகளின் பிறந்தநாளில் உலகை விட்டு மறைந்தார்.

ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், 3 ஆண்டுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்,14 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த கர்ம வீரர் காமராஜர், மறையும் போது அவரிடம் மிச்சம் இருந்தது வெறும் பத்து கதர் வேட்டிகள், நான்கைந்து சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம் மட்டுமே. தனக்கென்று எந்த சொத்தையும் சேர்த்து வைக்காத கர்ம வீரர், பொற்கால ஆட்சி நடத்தி, நவீனத் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து தந்திருக்கிறார். பெருந்தலைவர் காமராஜர் புகழ் காலம் உள்ளளவும் நிலைத்திருக்கும்.

Tags: congress presidentPerundhalivar Kamarajtamilnadu chief minister
ShareTweetSendShare
Previous Post

எளிமை, பணிவு, உறுதி மூலம் தேசத்தை ஊக்கப்படுத்தியவர் லால் பகதூர் சாஸ்திரி – எல்.முருகன் புகழாரம்!

Next Post

மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

Related News

நடிகை மனோரமாவின் மகன் பூபதியின் உடலுக்கு திரைப் பிரபலங்கள் அஞ்சலி!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மண்டபம் அருகே பிரசாதம் தயாரிப்பதை ஏற்க முடியாது – மதுரை உயர் நீதிமன்ற கிளை

ராணுவத்திற்கு ரூ. 79,000 கோடிக்கு ஆயுதம் கொள்முதல் – மத்திய அரசு ஒப்புதல்!

இனி இந்தியாவை தாக்க வேண்டுமென்றால் பாகிஸ்தான் 100 முறை சிந்திக்கும் – ராஜ்நாத்சிங்

100 ஆண்டுகள் கடந்தாலும் ஆர்ஜேடியின் காட்டாட்சியை மக்கள் மறக்க மாட்டார்கள் – பிரதமர் மோடி

அரூர் தென்பெண்ணை ஆற்றில் சிக்கி கொண்ட சிறுவன் – 6 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – 45,000 கன அடி நீர் வெளியேற்றம்!

தஞ்சையில் துணை முதல்வர் பார்வையிட வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துவது தொடர்பான விவகாரம் – ஆய்வு குழுவை அமைத்தது மத்திய அரசு!

ராமநாதபுரம் அருகே நீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

நாடுகடத்தப்படும் மெஹுல் சோக்சி : பள பள வசதிகளுடன் சிறையில் தயாரான ஸ்விஸ் அறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies