பெரியார் சிலையை அகற்றவது குறித்து பேசியதாக இந்து முன்னணி நிர்வாகி கனல் கண்ணன் மீது நிலுவையில் இருந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடந்த 2022 ம் ஆண்டு முதல் எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இவ்வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கனல்கண்ணன் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி சிலை பீடத்தில் இடம்பெற்றுள்ள வாசகங்களின் அடிப்படையில் தான் கனல் கண்ணன் இவ்வாறு பேசியிருப்பதாக தெரிவித்து அவர் மீது உள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.