சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று கூறுபவர்கள் அழிந்து போவார்கள் என உதயநிதி பேச்சை சுட்டிக்காட்டி ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் எச்சரித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சனாதன தர்மத்தை தாக்கிப் பேசுபவர்களை கண்டும் காணாமல் இருப்பது சமய சார்பற்ற நிலை ஆகாது என தெரிவித்தார் சனாதன தர்மத்தை யாராலும் அழிக்க முடியாது என்றும் பவன் கல்யாண் கூறினார்.