சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு விழாவை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.
நவராத்திரி விழாவானது இன்று தொடங்கி வரும் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் கிண்டி ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு விழாவை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் வருகைக்கு பின் மூன்றாவது முறையாக நடைபெறும் இந்த நவராத்திரி விழா வில்லு பாட்டுடன் தொடங்கியது.
மேலும் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் கொலுவை பொதுமக்கள் காண இணையதளத்தில் பதிவு செய்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளது.