சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார்.
இந்த நிலையில் கடந்த 30-ம் தேதி நள்ளிரவு உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார்.
இதயத்தில் இருந்து பிரியும் ரத்த நாளத்தில் வீக்கம் இருந்ததால் அவருக்கு ஸ்டெண்ட் பொருத்தப்பட்டது. தற்போது அவரது உடல் நிலை சீரான நிலையில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.