காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பாமக சார்பில் அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் அதை செயல்படுத்த தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பாமக குற்றம் சாட்டியுள்ளது.
இதனை கண்டித்து அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த பாமக அழைப்பு விடுத்தது. இதனை தொடர்ந்து பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று மட்டும் வியாபாரிகள் அரை நாள் கடைகளை அடைத்து தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பேருந்துகளும் வழக்கத்தை விட குறைவாக இயக்கப்பட்டன.