ஹமாஸ் அரசின் தலைவர் ராவி முஷ்தஃபா பதுங்கு குழியில் இருந்தபோது 3 மாதத்துக்கு முன்பே அவரை கொலை செய்துவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.
காசாவின் வடக்கு முனையைக் குறிவைத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அரசின் தலைவர் ராவி முஷ்தஃபா கொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு படை எக்ஸ் தள பக்கத்தில், ஹமாஸ் அரசின் தலைவர் ராவி முஷ்தஃபா, அதன் கமாண்டராக இருந்த சமேஹ் சிராஜ் மற்றும் சமேஹ் அவுதுஹே ஆகியோர் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும், தங்களை தாக்கிய பயங்கரவாதிகள் ஒழிக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.