கனிமவளங்கள் தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அமெரிக்காவின் முன்னணி முதலீட்டாளர்களை சந்தித்தார். வாஷிங்டனில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியாவும், அமெரிக்காவும் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டில் ஆழமான உறவை கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு ஒபாமா, ட்ரம்ப், பைடன் ஆகியோருடன் பணியாற்றி சிறந்த உறவை முன்னெடுத்து சென்றதாக கூறினார். விண்வெளி, விமானப் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் தூய்மையான எரிசக்தி போன்ற துறைகளில் இருநாடுகளும் பரஸ்பர நலன்களைப் பகிர்ந்து கொள்வதாக குறிப்பிட்ட அவர், ராகுல் காந்தியை போல உள்நாட்டு அரசியலை வெளிநாட்டில் பேசப்போவதில்லை எனக்கூறினார்.
தேசத்தை மேம்படுவதற்கான முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.