நாகை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டப்படாமல் அதிகாரிகள் முறைகேடு செய்தது அம்பலமாகியுள்ளது.
கீழ்வேளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 146 வீடுகள் கட்டாமலேயே கணக்கு காட்டி பயனாளிகள் பெயரில் அதிகாரிகள் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
அதன் பேரில் பொதுப்பணித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர், ஆதமங்கலம், பட்டமங்கலம், கொடியாளத்தூர், கோவில்கண்ணாப்பூர் ஆகிய இடங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக் கொடுக்கப்படாமல் பயனாளிகள் பெயரில், அதிகாரிகள் பல கோடி ரூபாய் மோசடி செய்தது அமலமாகியுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து விசாரணை முடிவில் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.