திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள தங்கக் கொடி மரத்தின் வளையம் திடீரென உடைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆந்திரா மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருமலை ஏழுமலையான் கோயிலில், வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று மாலை 5:45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.
இந்த நிலையில், கொடியேற்றுவதற்காக தங்கக்கொடி மரத்தின் உச்சியில் உள்ள வளையத்தில் கயிற்றை பொருத்தும் முயற்சியில் கோயில் அர்ச்சகர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, வளையம் திடீரென்று உடைந்து விட்டதால், அதனை சீரமைக்கும் பணியில் தேவஸ்தான ஊழியர்கள் ஈடுபட்டனர். ஏற்கனவே திருப்பதி லட்டு விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ள நிலையில், தங்க கொடி மரத்தின் வளையம் உடைந்ததால். பக்தர்கள் கலக்கமடைந்தனர்.