தஞ்சை கொள்ளிடம் ஆற்றில் முதலை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வாழ்க்கை கிராமத்தில் அமைந்துள்ள இந்த ஆற்றில் கடந்த சில நாட்களாக முதலை நடமாட்டம் இருப்பதாகவும், கால்நடைகளை முதலை வேட்டையாடி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
எனவே முதலையால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், வனத்துறை அதிகாரிகள் முதலையை பிடிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்தனர்.