தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த மாதம் 28ஆம் தேதி காலாண்டு விடுமுறை தொடங்கியது. இந்த விடுமுறை நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதில், பள்ளிகளில் வகுப்பறைகள் உள்பட வளாகம் முழுவதும் தூய்மைப் பணிகள் கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும். எனவும்
பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே, மாணவர்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டுத் தேர்வின் விடைத்தாள்கள் விநியோகிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2-ஆம் பருவத்துக்காக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பாட நூல்கள் உடனடியாக மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். என்றும்
பருவமழையை முன்னிட்டு பள்ளிகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது
தற்போது, பல மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் மாணவர்களின் நலன் கருதி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட அறிவுறுத்தல்களை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர 2- ஆம் பருவத்துக்கான கற்றல்-கற்பித்தல் செயல் திட்டங்கள்,
கலைத் திருவிழா உள்ளிட்டவை உரிய வழிகாட்டுதல்கள்படி தலைமை ஆசிரியர்கள் நடத்தப்பட வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.