சென்னை பெரியமேடு சாலையில் ரூட்டு தல விவகாரத்தில் கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் படுகாயமடைந்தார்.
பெரியமேடு சாலையில், ஒரே பேருந்தில் பயணித்த இருவேறு கல்லூரி மாணவர்களுக்கிடையே ரூட்டு தல விவகாரத்தில் மோதல் ஏற்பட்டது. அப்போது மாணவர் ஒருவரை மற்றொரு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சரமாரியாக தாக்கினர்.
இதில் திருத்தணியை சேர்ந்த சுந்தர் என்ற மாணவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சுந்தர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், மாணவனை தாக்கியவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.