பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்தில், தங்களின் கோரிக்கைகளை மேற்குவங்க அரசு நிறைவேற்றத் தவறியதாக குற்றஞ்சாட்டி, பயிற்சி மருத்துவர்கள், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
முன்னதாக பாதுகாப்பான பணிச்சூழல், மருத்துவர்களை தாக்கினால் உடனடி நடவடிக்கை உள்பட பல்வேறு கோரிக்கைகளை 24 மணி நேரத்தில் நிறைவேற்றுமாறு கடந்த வெள்ளிக்கிழமை பயிற்சி மருத்துவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஆனால், மேற்குவங்க அரசு கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காததால் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
















