சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியைக் காணவந்து வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சியை காண 3 லட்சம் மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 15 லட்சத்திற்கு மேற்பட்டோர் மெரினா கடற்கரையில் குவிந்தனர். இதனால், கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்ததால், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
கடுமையான கூட்டநெரிசலால் மூச்சுத்திணறல் ஏற்பட்டும், வெயிலின் தாக்கத்தால் நீர்ச்சத்து குறைந்தும் 200க்கும் மேற்பட்டோர் மயக்கமஅடைந்தனர்.
அவர்கள் அனைவரும் உடனடியாக ஓமந்தூரார், ராஜீவ் காந்தி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 5 பேர் உயிரிழந்தனர். பலருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.