இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு 5 நாள் பயணமாக இந்தியா வந்தார். அவரை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் வரவேற்றார்.
பின்னர், அவரும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெய்சங்கர், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, பிரதமர் மோடியுடன் இன்று நடத்தவுள்ள பேச்சுவார்த்தை இரு நாடுகள் இடையேயான நட்புறவுக்கு புது உத்வேகம் அளிக்கும் என தெரிவித்தார்.