நடிகர் விஜய்யின் அரசியல் மாநாடு வெற்றியடைய வாழ்த்துவதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தீபாவளி பண்டிகையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், விக்கிரவாண்டியில் நடைபெறும் தவெக மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்த அவர், மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் செல்வது குறித்து யோசிப்பேன் என்றும், தவெக உடன் கூட்டணி வைப்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.