கேரள மாநிலம், இடுக்கி தேக்கடி படகு துறையில் உலா வந்த ஒற்றைக் காட்டு யானையை கண்டு சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர்.
பெரியார் புலிகள் சரணாலயத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் இருந்து தண்ணீர் குடிப்பதற்காக பெரியார் அணைக்கு வரும் வனவிலங்குகளை கண்டு களிப்பதற்காக சுற்றுலா பயணிகள் தேக்கடி வருவது வழக்கம். அந்த வகையில், தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் தேக்கடியில் குவிந்தனர்.
அப்போது, தேக்கடி படகுத்துறை அருகே உலா வந்த காட்டு யானையை சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்து வீடியோ எடுத்து மகிழ்ந்தனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.