பஞ்சாப்பில் மேடை சரிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் நவராத்திரியையொட்டி இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
நள்ளிரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் திடீரென மேடையில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு தூண் சரிந்து பார்வையாளர் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.