மேகாலயாவில் கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.
மேகாலயாவின் மேற்கு கரோ ஹில்ஸ் மற்றும் தெற்கு கரோ ஹில்ஸ் மாவட்டங்களில் கடந்த 4ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது.
இதனால், இருமாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு காணப்பட்ட நிலையில், பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்ததாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.