போஸ்னியா நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது.
தென்கிழக்கு ஐரோப்பாவின் பால்கன் தீபகற்பத்தில் உள்ள போஸ்னியாவில் 2 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காணாமல்போனதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.