மகளிர் டி20 உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியை சேர்ந்த வீராங்கனைகள் அருந்ததி ரெட்டி 3 விக்கெட்டும், ஸ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.