சென்னை மெரினா வான் சாகச நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
சரவணன் கருப்பசாமி என்ற வழக்கறிஞர் அளித்த புகாரில், விமான படையினரால் நடத்தப்பட்ட வான் சாகச நிகச்சிக்கான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள, போலீஸ் கமிஷனர் அருண் தவறிவிட்டார் என குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது பொறுப்பற்ற போக்கால் அப்பாவி மக்கள் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள வழக்கறிஞர், இச்சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி, தவறு செய்த போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.