ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவை பிரம்மோற்சவ விழாவிற்காக திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
திருப்பதி பிரம்மோற்சவத்தில் கருட சேவையின்போது, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பூமாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள், பெருமாளுக்கு அணிவிப்பதற்காக அனுப்பிவைக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், திருப்பதியில் கருடசேவை நாளை நடைபெற உள்ள நிலையில், பெருமாளுக்கு சாற்றுவதற்காக, ஆண்டாள் சூடிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவை திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனை முன்னிட்டு ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து பிரத்யோக மலர்கள் கொண்டு மாலை மற்றும் கிளி தயாரிக்கப்பட்டு, ஆண்டாளுக்கு சாற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஆண்டாளை தரிசனம் செய்தனர்.