சென்னை பட்டினம்பாக்கம் லூப் சாலையில் 14 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மீன் அங்காடிக்கு சாலையோர மீன் வியாபாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி மீனவர்களுக்காக, பட்டினப்பாக்கம் லூப் சாலையில் அமைக்கப்பட்ட மீன் அங்காடியை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
ஆனால், மீன் அங்காடியில் போதுமான இடவசதியும், வியாபாரம் செய்வதற்கான சூழலும் இல்லாததால் மீன் அங்காடிக்கு சென்று விற்பனை செய்ய, வியாபாரிகள் மறுப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், மீன் அங்காடி திறக்கப்பட்டு 50 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், மாநகராட்சி அதிகாரிகளால் வியாபாரிகள் வலுக்கட்டாயமாக மீன் அங்காடிக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். இந்த நவீன மீன் அங்காடியில் 366 மீன் வியாபாரிகள் வியாபாரம் செய்யும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.