சென்னை மெட்ரோ ரயிலில் நேற்று ஓரே நாளில் 4 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி மெரினா கடற்கரையில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதை காண மெரினாவில் லட்சக்கணக்கான மக்கள் கூடினர்.
தொடர்ந்து நிகழ்ச்சி நிறைவுபெற்றவுடன் அனைத்து பொது போக்குவரத்துகளும் நிரம்பி வழிந்தன. வழக்கமாக ஞாயிறு அன்று சராசரியாக ஒரு லட்சத்து 70 ஆயிரம் பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துவந்தனர்.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 4 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.