கோவையில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெற்றோர் மற்றும் மாணவர்கள் அச்சமடைந்தனர்.
அவிநாசி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அச்சமடைந்த ஆசிரியர்கள், உடனடியாக மாணவர்களை பள்ளியிலிருந்து வெளியேற்றினர்.
தொடர்ந்து தகவலின் பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.