பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமான நிலைய குண்டுவெடிப்பில் 2 சீனர்கள் உயிரிழந்த நிலையில், இதற்கு சீன அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
கராச்சி விமான நிலையத்தில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 2 சீனர்கள் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தானில் உள்ள சீன தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தானில் உள்ள சீனர்கள் விழிப்புடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா, பாகிஸ்தான் அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.