திண்டுக்கல்லில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அங்கப்பிரதட்சணம் செய்து மனு அளித்தனர்.
கொசவப்பட்டி பகுதியில் உள்ள கள்ளிக்குத்து ஓடையை ஆக்கிரமித்து பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் வட்டாட்சியரிடம் பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கப்பிரதட்சணம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.