நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஆட்டோவும், காரும் நேருக்கு நேர் மோதிய பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கோரஞ்சல் அண்ணா நகர் பகுதியில் சென்றுக்கொண்டிருந்த ஆட்டோவும் காரும் நேருக்கு நேருக்கு மோதியது.
இதில் காரில் பயணித்த 3 பேர், ஆட்டோவில் சென்ற 4 பேர் என மொத்தம் 7 பேர் பலத்த காயமடைந்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.