அமெரிக்க அதிபர் தேர்தலில் விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் வாக்களிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் சட்டமன்றம் நாசா விண்வெளி வீரர்கள் விண்ணில் இருந்து வாக்களிக்க அனுமதிக்கும் மசோதாவை நிறைவேற்றியது.
அதன் அடிப்படையில் DAVID WOLF, KATE RUBINS ஆகிய இரண்டு நாசா வீரர்கள் விண்வெளியில் இருந்து கடந்த அமெரிக்க அதிபர் தேர்தல்களில் வாக்களித்தனர். இந்நிலையில், நவம்பர் 5ம் தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் வாக்களிக்க உள்ளார்.
நாசாவின் அதிநவீன விண்வெளி தொடர்பு மற்றும் ஊடுருவல் திட்டத்தின் மூலம் இந்த வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.