ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாகியுள்ள சம்போ செந்திலைப் பிடிக்க காவல் துறை அதிகாரிகள் துபாய் செல்லத் திட்டமிட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கடந்த வாரம் 30 பேர் மீது 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய சம்போ செந்தில் தலைமறைவாகி உள்ளார். துபாயில் சம்போ செந்தில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவரைப் பிடிக்கும் முயற்சியில் காவல் துறை அங்கு செல்லவுள்ளது.
இன்னும் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் சென்னை காவல் துறையின் தனிப்படை துபாய் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.