மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அடிப்படை வசதிகளை தமிழக அரசு திறம்பட செய்திருக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
இந்திய விமானப் படை சார்பில், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த சம்பவம், வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்தியதை ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன் என கூறியுள்ள விஜய், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், தமிழக அரசு இனி வரும் காலங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார்.