வடமாநிலங்களில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வடமாநிலங்களில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 3ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி விழாவின் 7ஆம் நாளில் பல்வேறு பகுதிகளில் பல வகையான கலை நிகழ்ச்சிகள், நடனங்கள் இடம்பெற்றன. குஜராத்தின் போர் பந்தரில் மஹர் சமூக மக்களின் நடன நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று நடனமாடினர்.
ஜாம்நகரில் இந்தோனி கர்பா நடனம் அரங்கேற்றப்பட்டது. இதில் பங்கேற்ற ஆண்கள், தங்கள் தலையில் தீச்சுடருடன் நடனமாடியது வியப்பை ஏற்படுத்தியது.
அகர்தலாவின் திரிபுரா முதலமைச்சர் Manik Saha, துர்கா பூஜை பந்தலை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து அங்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் வண்ண விளக்கு அலங்காரத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட துர்கா பூஜை பந்தலை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.